தமிழ் தொல்லியல் புனைவுகள்: எழுத்து மரபும் தொன்மையும்
மொழி
மொழி என்பது மனிதன் மிருகங்களிடமிருந்து பிரிந்து, அவனின் மூளை வளர்ச்சி மேன்மை அடைந்த பின், அவன் தனக்குத் தெரிந்த அறிவும், தனக்கு வரும் ஆபத்தையும், தன்னுடைய சக மனிதனுக்கு சொல்லத் தன் வாயினாலும், கைகளினாலும் பல ஒலிகளை எழுப்பி தெரிவித்தான். அதேபோல் தான் பிற உயிரினங்களும் இதனையே சத்தத்தின் மூலம் செய்கின்றன. பின் நாளடைவில் மூளையின் வளர்ச்சி அதிகரித்தால் குறிப்பிட்ட சத்தங்களை எழுப்பினான். அவைகள் தான் மொழிகளாக உருவாகத் தொடங்கின. அவ்வாறுதான் மொழிகள் உருவாகியிருக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூற்றுக்களை முன்வைக்கின்றனர்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கட்டங்களில் மொழிதான் அவனின் அறிவியல் சிந்தனைகளையும், கலாச்சாரங்களையும் வளர வைத்தது. அந்த வரிசையில் ஆதிமனிதன் பயன்பாட்டில் இருந்த மொழிகள்:
தமிழ், சமஸ்கிருதம், சுமேரிய மொழி, மெசொபொடாமிய அகாடிய மொழி, எகிப்திய மொழி, அராமிக் மொழி, ஹீப்ரு, பாலி மொழி, பிராகிருதம், செராமிக்.
மனிதன் பயன்படுத்திய சித்திர மொழிக்கு பிறகு இவைகள் தான் இலக்கணம் கொண்ட மொழிகளாக இருந்தன. அவைகளிலும் சில அழிந்து போய்விட்டது; எஞ்சி உள்ளவை காலத்தை வென்று இன்றும் உலகில் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. அவற்றின் மிக முக்கியமானது தமிழ்.
காலத்தை வென்ற மொழி தமிழ்
“கல் தோன்றா மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மொழி தமிழ்” என்று ஏன் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்? இது அவர்களின் மொழிப்பற்று அல்ல; அவர்கள் ஆய்வின் போது கிடைத்த ஆதாரங்களின் வழியாக வந்த உண்மையா என்பதை பார்ப்போம்.
கலாச்சாரங்களையும், மொழிகளையும், மக்களின் வாழ்வுகளையும் காலம் கடந்து செல்லக் கூடியவை அவர்கள் விட்டுச் சென்ற சில எச்சங்களே. அப்படி அந்த எச்சங்களை ஆராய்ந்து பார்ப்போரை தொல்லியல் ஆய்வாளர் என்று கூறுவர். தொல்லியல் மூலமாக தான் உலகம் தோன்றியது, பின் நாளடைவில் அதில் வாழ்ந்த உயிரினங்கள், மனிதர்கள், அவனின் செயல்பாடுகளை அறிய முடிகிறது. அது போல தான் மொழியையும் நாம் அறிய முடியும். அப்படி தொல்லியலின் மூலம் கிடைத்த தமிழைப் பற்றிய ஆதாரங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தமிழ் தொன்மையை வெளிப்படுத்தும் தொல்லியல் ஆய்வுகள்
தமிழர் வரலாற்றைத் தெளிவுபடுத்தும் பல தொல்லியல் ஆய்வுகள் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் நடந்து வந்துள்ளன. இவை தமிழர் பண்பாட்டு மரபையும், எழுத்துமுறையையும், வாழ்கைமுறையையும் வெளிப்படுத்துகின்றன. முக்கிய ஆய்வுகள் பின்வருமாறு:
1. அதிச்சநல்லூர்
- இடம்: தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
- ஆய்வுகள் நடந்த வருடம்: முதன்முதலில் 1904, பின்பு 2004 மற்றும் 2021–22
- கண்டுபிடிக்கப்பட்டவை:
- பானைகள், எலும்புக்கூடுகள்
- ஆயுதங்கள்
- எலுமிச்சை வடிவ மூக்கு கம்பிகள்
- தமிழ் பிராமி எழுத்துக்கள் குறியீடு செய்யப்பட்ட பொருட்கள்
- காலம்: கிமு 1000 – கிபி 200
- முக்கியத்துவம்: தகனம் முறை, பண்பாட்டு அமைப்புகள், இந்தியாவின் தொன்மையான குடியிருப்பு.
2. கீழடி
- இடம்: சிவகங்கை மாவட்டம், மதுரை அருகில்
- ஆய்வுகள்: 2015 முதல் தொடர்ச்சியான ஆய்வுகள்
- கண்டுபிடிக்கப்பட்டவை:
- நகர மாட அடுக்கக வீடுகள்
- மண்பாண்டங்கள், உலோக வேலைப்பாடுகள்
- தமிழ் பிராமி எழுத்துக்கள்
- காலம்: கிமு 600 – கிமு 100
- முக்கியத்துவம்: நகரமய வாழ்க்கை, கல்வியறிவு, சமுதாய அமைப்பு
3. போருணை (திருநெல்வேலி)
- இடம்: தாமிரபரணி நதி பகுதி
- ஆய்வுகள்: 2021–2023
- கண்டுபிடிக்கப்பட்டவை:
- பாண்டியர் கால தாதுகல்
- கருவூலங்கள்
- காலம்: கிமு 11500 வரை
- முக்கியத்துவம்: இந்தியாவின் மிகப் பழமையான நாகரிக அடையாளங்கள்
4. அரிக்காமேடு
- இடம்: புதுச்சேரி அருகில்
- ஆய்வுகள்: 1940களில்
- கண்டுபிடிக்கப்பட்டவை:
- ரோமக் கலாச்சாரம் தாக்கம் பெற்ற பொருட்கள்
- சரக்கு வணிக நிலையங்கள்
- மண்பாண்டங்கள், கண்ணாடி பொருட்கள்
- காலம்: கிமு 2ம் நூற்றாண்டு – கிபி 2ம் நூற்றாண்டு
- முக்கியத்துவம்: தமிழர்-ரோமன் வணிக பரிமாற்றம்
5. கொடுமணல்
- இடம்: ஈரோடு மாவட்டம்
- காலம்: கிமு 5ம் நூற்றாண்டு – கிபி 2ம் நூற்றாண்டு
- விஷேஷம்: உலோக வேலைப்பாடுகள், மருந்து சோதனைகள், தொழில்நுட்ப அறிவு
- மூலம்:
- இந்திய தொல்லியல் துறை
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
- ஷிவசுப்பிரமணியம் நம்பியாரின் ஆய்வுகள்
- தஞ்சாவூர் அரசு அருங்காட்சியகம்
தமிழ் எழுத்து மரபு: தமிழி, தமிழ் பிராமி, பிராமி எழுத்து
பிராமி எழுத்து முறையின் தோற்றமும் தமிழுடன் உள்ள தொடர்பும்:
பிராமி என்பது இந்தியத் தொல்லியல் வரலாற்றில் முக்கியமான எழுத்து முறையாக கருதப்படுகிறது. ஆனால், இரா. இராசசாமி, இரா. நகுலன் போன்ற தமிழறிஞர்கள் தமிழ் எழுத்து முறைக்கு தனிச்சிறப்பு உண்டு என வலியுறுத்துகின்றனர். தமிழ் பிராமி என்பது தனிப்பட்ட எழுத்துமுறைதான் என்ற கூற்றும், அதற்கே உரிய பெயர் "தமிழி" எனவும் கூறப்படுகிறது.
தமிழி பற்றி தொல்லியல் ஆதாரங்கள்
- இடம்: மாங்குளம், மதுரை மாவட்டம்
- கண்டுபிடிப்பு: 1882 – ராபர்ட் செவெல்
- தெளிவுபடுத்தியது: 1924 – கே.வி. சுப்பிரமணிய அய்யர்
- ஆய்வு: 1965 – இராவதம் மகாதேவன்
- காலம்: கிமு 3 – 2ஆம் நூற்றாண்டுகள்
- முக்கிய கல்வெட்டுகள்:
- நந்த சிகுவன் – பாண்டிய பணியாளர் கடலன் வழுதி
- சாதிகன் – அரச உறவினர்
- அந்தை அசுதன் – வணிகர்
- கனினந்தி, சந்தரிதன் – குகை வழங்கல்
முக்கியத்துவம்:
இவை தமிழியெழுத்து மரபுக்கான முதன்மை ஆதாரங்கள். சமண சமூகத்துடன் பிணைபட்டவை. தமிழ் மொழி கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே எழுத்து வடிவம் பெற்றதற்கான ஆதாரங்கள்.
முடிவுரை
தமிழ் நாகரிகத்தின் எழுத்து மரபு இன்று கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் சான்றுகளால் மட்டுமல்ல;
காலத்தை தாண்டும் தமிழரின் அறிவாற்றலும், கலைஞானமும் ஒளிர்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
தமிழரின் தொன்மையும், அவர்களது வாழ்வியல் தத்துவமும், கல்வியும், கலைமுயற்சிகளும் அழியாத அடையாளமாக இந்த தொல்லியல் ஆதாரங்கள் நிலைத்து நிற்கின்றன. இவை அனைத்தும் இணைந்து,
“தமிழ் ஒரு மொழியல்ல, ஒரு மறக்கமுடியாத வரலாறு” என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றன.
Comments
Post a Comment